சென்னையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி ஜிம்பாப்வே அணியை (Zim vs Ind Super 8) வென்றது. இந்த வெற்றி ஆனது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மோதலுக்கு ஒரு தளம் அமைத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆனது அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்யும் விதத்தில் வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்திய அணி அதிரடி ஆட்டம்
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ஆனது இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியின் பவர் ப்ளே ஆட்டம் ஆனது தீவிர தொடக்கத்தை கொடுத்தது. இந்தியா ஆரம்ப 4.1 ஓவர்களுக்குள் 51/1 எடுத்தது. இந்தியா ஆனது 6 ஓவர்கள் முடிவில் 80/1 எடுத்தது. அதன் ரன் ரேட் 13.33-க்கு மேல் உயர்ந்தது. அபிஷேக் சர்மா 55 ரன்கள் குவித்தார். 23 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 50 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இந்தியா 256/4 என்ற அதிரடி Finish கொடுத்தது.
ஜிம்பாப்வே அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது
ஜிம்பாப்வே அணியின் இளம் வீரர் பிரையன் பென்னட் அட்டகாசமாக விளையாடி 97 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 31 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் (Zim vs Ind Super 8) ஆகியதால் அந்த அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் அபார பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் வரலாற்று ஸ்கோர் 256/4
இந்த 256/4 என்ற அதிரடி ஸ்கோர் ஆனது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா பெற்ற மிக உயர்ந்த மொத்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பாக 2007-ல் England-க்கு எதிராக 218/4 ஸ்கோர் எடுத்துள்ளது.
இந்தியாவின் NRR கணிசமாக மேம்பட்டுள்ளது (Zim vs Ind Super 8)
இந்த 72 ரன் Victory மூலம் இந்தியாவின் நெட் ரன் ரேட் கணிசமாக மேம்பட்டுள்ளது. தற்போது West Indies-க்கு எதிரான கடைசி Super 8 ஆட்டம் Virtual Quarter-Final ஆக உருவெடுத்துள்ளது. இந்திய அணி இனி வரும் மீதமுள்ள (Zim vs Ind Super 8) போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், இந்திய அணியின் ரன் ரேட் ஆனது அதிகரிக்கும்.
இந்தியாவின் செமிபைனல் கனவு உயிர் பெற்றுள்ளது
தற்போது தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜிம்பாப்வே அணி ஏற்கெனவே வெளியேறி உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு, மீதமுள்ள போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், மேலும் தென்னாப்பிரிக்கா அணி ஆனது மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். மேற்கிந்திய தீவுகள் அணியும் மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ஆனது அதிகரிக்கும்.